×

நிலவை நோக்கிய நம் பயணம் தொடங்கிவிட்டது; அடுத்த 42 நாட்கள் மிக முக்கியமானவை.. சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் பேட்டி..!!

ஸ்ரீஹரிகோட்டா: அடுத்த 42 நாட்கள் மிக முக்கியமானவை என்று சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் தெரிவித்துள்ளார். ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் இன்று (ஜூலை 14) மதியம் 2.35 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் இத்திட்டம் புதிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், சந்திரயான்-3 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. சந்திரயான் 3-க்காக உழைத்த என் குழுவுக்கும், இஸ்ரோ அதிகாரிகளுக்கும், அனைத்து ஊழியர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நிலவை நோக்கிய நம் பயணம் தொடங்கிவிட்டது. இயக்கத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அடுத்த 42 நாட்கள் மிக முக்கியமானவை என்று குறிப்பிட்டார்.

விண்வெளியில் சாதித்த தமிழன்:

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரயில்வே ஊழியர் பழனிவேல் என்பவரின் மகன்தான் விஞ்ஞானி வீர முத்துவேல் விண்வெளியில் ஈடுபட்டால் தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் படிப்பை முடித்து, உயர் படிப்பிற்காக சென்னை ஐஐடியில் சேர்ந்து ஏரோ ஸ்பேஸ் துறையில் முக்கிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.

1989ம் ஆண்டு இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவில் சேர்ந்தார். பல பொறுப்புகளுக்கு பிறகு, சந்திரயான் 3 திட்டத்தின் இயக்குனராக 2019இல் நியமிக்கப்பட்டார். சந்திரயான் 3 திட்டத்தில் ஏற்பட்ட தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, சந்திரயான்-3 விண்கலத்தை கவனமாக வடிவமைத்தார். இன்று (ஜூலை 14) சந்திரயான்-3 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

The post நிலவை நோக்கிய நம் பயணம் தொடங்கிவிட்டது; அடுத்த 42 நாட்கள் மிக முக்கியமானவை.. சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் பேட்டி..!! appeared first on Dinakaran.

Tags : Chandrayaan ,Weeramuthuvel ,Sriharikota ,Chandrayaan- ,Sriharikota… ,
× RELATED சென்னையை சேர்ந்த ஸ்டார்ட்அப்...