×

பிபிசி மாஜி நிருபர் மீது பாலியல் புகார்: ஸ்காட்லாந்து போலீஸ் விசாரணை

லண்டன்: பிபிசி முன்னாள் நிருபர் மீது 20க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். பிபிசி தொலைக்காட்சியின் முன்னாள் நிருபர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஹர்தீப் சிங் கோலி(54). சீக்கியரான கோலி பிபிசி தொலைக்காட்சியில் பல்வேறு நாடுகளின் உணவு பழக்கங்கள் குறித்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். ஹர்தீப் சிங் கோலி தன்னை பற்றி சமூக வலைதளங்களில் ஆபாசமாக கருத்துகளை வெளியிட்டதாக இங்கிலாந்தின் தொழிலாளர் கட்சியை சேர்ந்த பெண் பிரமுகர் சமீபத்தில் குற்றம் சாட்டினார்.

இதையெடுத்து 20க்கும் மேற்பட்ட பெண்கள் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளனர். கடந்த 2009ம் ஆண்டு பிபிசியில் நிருபராக பணிபுரிந்த போது, பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக இளம் பெண் அவர் மீது புகார் தெரிவித்தார். இதையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். 2020ம் ஆண்டு கோலியின் உடனான உறவை பிபிசி முறித்து கொண்டது. கோலி மீது உள்ள புகார்களை விசாரித்து வருவதாக ஸ்காட்லாந்து போலீசார் தெரிவித்தனர்.

The post பிபிசி மாஜி நிருபர் மீது பாலியல் புகார்: ஸ்காட்லாந்து போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Tags : BBC ,Scotland Police ,LONDON ,BBC TV ,Maji ,
× RELATED நான் முதல்வன் திட்டத்தின் கீழ்...