×

வேறு தேதிக்கு டிக்கெட் மாற்றித் தராததால் லண்டன் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள கொண்டோட்டி பகுதியை சேர்ந்தவர் சுகைப் (29). இவர் குடும்பத்துடன் லண்டனில் தங்கியுள்ளார். அண்மையில் இவர் குடும்பத்தினருடன் லண்டனில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் கேரளாவுக்கு வந்திருந்தார். அப்போது இவரது மகளுக்கு விமானத்தில் வைத்து உணவு ஒவ்வாமை ஏற்பட்டது. இதனால், லண்டன் திரும்புவதற்கு 25ம் தேதிக்கு(நேற்று) பதிலாக வேறொரு நாளுக்கு டிக்கெட்டை மாற்ற சுகைப் விடுத்த கோரிக்கையை ஏர் இந்தியா நிராகரித்தது. இதையடுத்து, அவர் போனில் லண்டன் விமானத்தில் குண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்தார். விசாரணைக்கு பின் போலீசார் அவரை கைது செய்தனர்.

The post வேறு தேதிக்கு டிக்கெட் மாற்றித் தராததால் லண்டன் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Sukhaib ,Kondotti ,Malappuram ,Kerala ,London ,
× RELATED கேரளம் ஆக மாறியது கேரளா