×

வீடற்ற 500 உறுப்பினர்களுக்கு ரூ.55.00 கோடி மதிப்பீட்டில் வீடு கட்ட மானியம்: அரசாணை வெளியீடு

சென்னை: 2023-2024-ஆம் ஆண்டு சட்டமன்றப் பேரவை வரவு தொடரில் ஆதிதிராவிடர் நலத்துறை செலவு கூட்டத் அமைச்சர் என்.கயல்விழிசெல்வராஜ் கீழ்க்காணும் புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்:

“தூய்மைப் பணியாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள வீடற்ற 500 உறுப்பினர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுத் திட்டத்தின் வீடுகள் தூய்மைப் பணியாளர் நல வாரிய மானியத்துடன் ரூ.55 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.”

மேற்காணும் அறிவிப்பினை செயல்படுத்தும் பொருட்டு. தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள வீடற்ற 500 உறுப்பினர்களுக்கு, தகுதியின் அடிப்படையில் ரூ.55.00 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் கட்டப்படும் பயனாளிகள் பங்களிப்புடன் கூடிய வீடுகள் வாங்க மானியம் வழங்கி அரசாணை (நிலை) எண். 84. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்(ஆதிந.6)துறை. நாள் 07.07.2023-இல் ஆணை வெளியிடப்பட்டது.

The post வீடற்ற 500 உறுப்பினர்களுக்கு ரூ.55.00 கோடி மதிப்பீட்டில் வீடு கட்ட மானியம்: அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Adi ,Minister ,N. Kayalvizhiselvaraj ,
× RELATED ஆதிதிராவிடர் பள்ளி ஆசிரியர்களுக்கான...