×

மழை காலத்திற்கு முன் புதிய தார் சாலை அமைப்பு

தூத்துக்குடி, ஜூலை 9: தூத்துக்குடியில் ரோச் காலனி உள்ளிட்ட மாநகரில் தேவைப்படும் பல்வேறு பகுதிகளிலும் மழை காலத்திற்கு முன்பாக புதிதாக தார் சாலை அமைக்கப்படும் என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையிலான மாநகராட்சி நிர்வாகமானது மாநகராட்சியில் மொத்தமுள்ள 60வார்டுகளிலும் வாழ்ந்துவரும் மக்களுக்கு மிக முக்கியத் தேவையான சாலை வசதியை முழுமையாக செய்துகொடுத்திட தீர்மானித்தது. இதையொட்டி இதற்கான அனைத்துப் பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகின்றன. அந்த வகையில், மாநகரிலுள்ள பல்வேறு வார்டுகளிலும் தார் சாலை, பேவர் பிளாக் சாலை, சிமென்ட் சாலை போன்றவை அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கும் வந்துள்ளது.

இந்நிலையில், மாநகராட்சிக்கு உட்பட்ட ரோச் காலனி, லயன்ஸ் பவுன், பெரிய கடைத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் புதிய தார் சாலை மற்றும் ஆங்காங்கே வடிகால்கள் அமைக்கப்பட உள்ள நிலையில் இப்பகுதிகளை மேயர் ஜெகன்பெரியசாமி அதிகாரிகள் குழுவினருடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் ‘‘தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் மற்றும் பிரதான சாலைகளில் நடைபெற்று வரும் வடிகால் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளேன். ரோச் காலனி உள்பட தூத்துக்குடி மாநகரில் தேவைப்படும் அனைத்துப் பகுதிகளிலும் மழைக்காலத்திற்கு முன்பாக புதிதாக தார் சாலை அமைக்கப்படும்.

அதன் ஒருபகுதியாக சண்முகபுரம் ரோடு சந்திப்பு முதல் குரூஸ்பர்னாந்து சிலை வரை, அந்தோனியார் கோயில் முதல் ஜார்ஜ் ரோடு வரை, ரயில்வே ஸ்டேஷன் ரோடு முதல் இந்திராகாந்தி சிலை வரை, மாதா கோயில் தெரு, பெரியகடை தெரு, ஜின் பேக்டரி ரோடு ஆகிய நகரின் முக்கிய சாலைகளில் நடைபெற்று வரும் பணிகள் அனைத்தும் இன்னும் 5 தினங்களுக்குள் முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வரப்படும்’’ என்றார். அப்போது, கவுன்சிலர்கள் ரெக்ஸ்லின், சுரேஷ்குமார், மீனவர் அணி மாநில துணை அமைப்பாளர் புளோரன்ஸ், மீனவர் அணி அமைப்பாளர் ஆர்தர் மச்சாது, வட்ட செயலாளர் ரவீந்திரன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post மழை காலத்திற்கு முன் புதிய தார் சாலை அமைப்பு appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Roach Colony ,Dinakaran ,
× RELATED கோடை விடுமுறை முடிந்து நெல்லை,...