×

இரும்பு குழாய்களை திருடியவர் கைது

ஓசூர், ஜூலை 9: தேன்கனிக்கோட்டை தாலுகா தொட்டஉப்பனூரை சேர்ந்தவர் லட்சுமி நாராயணன்(31). கட்டுமான தொழில் செய்து வருகிறார். இவர் அச்செட்டிப்பள்ளியில் ஜொனபெண்டா சாலையில், புதிய கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். கடந்த புதன்கிழமை கட்டுமான பணிகள் நடந்து வரும் இடத்திற்கு, லட்சுமி நாராயணன் சென்றார். அப்போது அங்கு மர்மநபர் ஒருவர் இரும்பு குழாய்களை திருடிக்கொண்டிருந்தார். அந்த நபரை கையும், களவுமாக பிடித்த லட்சுமி நாராயணன், மத்திகிரி போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் அவர், பழைய மத்திகிரியை சேர்ந்த சோமசேகர்(21) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 13.5 கிலோ இரும்பு குழாய்களை பறிமுதல் செய்தனர்.

The post இரும்பு குழாய்களை திருடியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Lakshmi Narayanan ,Thottauppanur ,Dhenkanikot taluk ,Achettipalli ,
× RELATED ஓசூர் அருகே குடும்பத் தகராறில் தம்பியை கொலை செய்த அண்ணன் கைது..!!