×

கர்நாடகாவில் தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: தக்சின கன்னடா மாவட்டத்திற்கு மிக கனமழை எச்சரிக்கை

பெங்களூரு: கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பெங்களூருவில் காலை முதலே கனமழை நீடித்து வருகிறது. கர்நாடக மாநிலத்தில் ஜூன் மாதத்தில் பருவமழை தாக்கம் மிக குறைந்த அளவே காணப்பட்டது. மேலும் ஜூலை மாதத்தின் ஆரம்பத்திலிருந்தே பருவமழையின் தீவிரம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வரமாக கர்நாடக மாநிலத்தில் கடலோர மாவட்டங்களான தக்சின கன்னடா மற்றும் உடுப்பி, கார்வார் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்த காரணத்தால் அந்த மாவட்டங்களில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொது மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று இந்த மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தக்சின கனடா, உடுப்பி ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் தற்போது பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதே போல் கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு மாவட்டங்களான சிக்கமங்களூரு மற்றும் குடகு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள காரணத்தால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு நகரிலும் இன்று காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. மேலும் தாழ்வான பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்து செல்லும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை கர்நாடக மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். உல்லால் மற்றும் கார்வார் ஆகிய இரண்டு பகுதிகளில் நேற்று ஒரே தினத்தில் இருவர் உயிரிழந்தனர். உயிரிழப்பை தடுப்பதற்காக அணைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மாநில அரசு சார்பாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.

The post கர்நாடகாவில் தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: தக்சின கன்னடா மாவட்டத்திற்கு மிக கனமழை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : South West ,Karnataka ,Dakshina Kannada district ,Bengaluru ,Dinakaran ,
× RELATED நீலகிரியில் நிலச்சரிவுகளை தடுக்க...