×

கேரளத்து அவியல்

தேவையானவை:

கறிவேப்பிலை – கொஞ்சம்
பீன்ஸ் – 10
வாழைக்காய் – 1
அவரைக்காய் – 8
கத்திரிக்காய் – 4
உருளைக்கிழங்கு – 2
சிறிய மாங்காய்- ஒன்று
காரட் – ஒன்று
பச்சை மிளகாய் – 2
கொத்தமல்லி தழை – 3 கொத்து
கடுகு – ஒரு டீஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் – கால் கப்
தயிர் – அரை கப்
உப்பு – அரை டீஸ்பூன்
மஞ்சள் – அரைத் டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்

செய்முறை

நறுக்கின காய்களை, உப்பு,மஞ்சள் போட்டு 2 கப் தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் வேக வைக்கவும். காய்கறிகள் முக்கால் பாகம் வெந்ததும் மாங்காயைப் போட்டு மூடவும். மாங்காய் சீக்கிரமே வெந்து விடும். தேங்காய், சீரகம், பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒன்றாய் சேர்த்து, விழுதாக அரைத்துக் கொள்ளவும். அதனுடன் அரைத்த தேங்காய் விழுதில், உப்பு போட்டு 3 நிமிடம் கிளறி விடவும். நன்கு கிளறிய பிறகு தயிரை ஊற்றி காய்கறிகளை நன்கு கிளறி விட்டு 30 வினாடி ஆனதும் அடுப்பில் இருந்து இறக்கி விடவும். பிறகு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை தாளித்து அவியலில் ஊற்றி மேலே கொத்தமல்லி தழையைத் தூவவும்.

The post கேரளத்து அவியல் appeared first on Dinakaran.

Tags : Kerala ,
× RELATED கேரளாவில் மயோனைஸ் சாப்பிட்ட 70...