×

தானம் மனிதனைப் புனிதனாக்குகிறது

நன்றி குங்குமம் ஆன்மிகம்

தானங்கள் செய்வதால் மனிதன் புனிதனாகிறான் என்பது சீதையின் கருத்தாக அமைகிறது. பஞ்சம், வெள்ளம், தீவிபத்து உண்டான காலங்களில் மக்களுக்கு நிவாரணமளித்தல், மருத்துவ உதவி, அன்னதானம், கல்விதானம், ஞானதானம், முதலியவை தானங்களாகும். இவ்வாறான தானங்கள் செய்பவருக்கு மோட்சம் கிடைக்கும்.

‘‘தானமும் தவமும் செய்பவராயின் வானவர் நாடுவழி திறந்திடுமே’’ என்பது அவ்வையின் வாக்கு. இந்தக் கலியுகத்தில், தானம்தான் மோட்சம் பெறும் வழியாகும் என்று மகாபாரதம் கூறுகிறது. காசி மாநகரத்திலேயே வாழும் பேற்றை ஒருவன் தானத்தினாலேயே பெறுகிறான் என்று கூறுகிறது காசி காண்டம்.

இஸ்லாமியம், ‘‘சொர்க்கம் செல்வதற்கு பிரதான வழியாக இருப்பது தானமேயாகும்’’ என்று கருத்தைக் கூறுகிறது. மனத் தூய்மை வழியாக கீதை சொல்லும் கருத்தில் அடுத்து வருவது. தவம், சாஸ்திரங்கள் படித்தல், திருத்தலப் பயணங்கள், புண்ணிய நீராடல், பூஜை, ஜெபம், பிரார்த்தனை, தியானம், சத்சங்கம் ஆகியவை அடங்கிய சீலமான வாழ்க்கை, மனிதனைப் புனிதனாக்குகிறது.

பணம் சேர்ப்பதற்காகவும், பதவியைப் பலப் படுத்திக் கொள்வதற்காகவும் மனிதன், பேய் அலைந்து படாதபாடு படுகிறான். எந்த உழைப்பில் சிறிதளவேனும் மனத் தூய்மைக்கு என்று மனிதன் மேற்கொள்வானேயாகில் வம்பும், வழக்கும், சண்டையும் துன்பமும், துயரமும் சமுதாயத்திலிருந்து பெரிதும் நீங்கும்.

தொகுப்பு: அருள் ஜோதி

The post தானம் மனிதனைப் புனிதனாக்குகிறது appeared first on Dinakaran.

Tags : Thanksgiving ,
× RELATED மஞ்சளின் மருத்துவக் குணங்கள்!