×

பெண்ணுக்கு கொலை மிரட்டல்

வடலூர், ஜூலை 5: மந்தாரக்குப்பம் அருகே வடக்கு சேப்ளாநத்தம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி தனலட்சுமி(38). அதே பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல். இவரது மனைவி அஞ்சலை. இவர் தனது வீட்டில் தேங்கி நின்ற மழை நீரை திறந்து விட்டதும், அருகில் உள்ள தனலட்சுமி வீட்டின் முன் மழைநீர் தேங்கியது. இது குறித்து தனலட்சுமி கேட்டதற்கு அஞ்சலை மற்றும் அவரது 2 மகன்கள் என 3 பேரும் சேர்ந்து தனலட்சுமியை அசிங்கமான வார்த்தைகளால் திட்டி, தாக்கி கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுத்தனர். இது குறித்து மந்தாரக்குப்பம் காவல் நிலையத்தில் தனலட்சுமி புகார் அளித்தார். புகாரின்பேரில் அஞ்சலை, கதிர்செல்வம்(30), செல்வமணி(28) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து, அதில் கதிர் செல்வத்தை கைது செய்தனர்.

The post பெண்ணுக்கு கொலை மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : North Cheplanantham Mariamman Koil Street ,Mandharakuppam ,Thanalakshmi ,
× RELATED பைக் மோதி டெய்லர் பலி