×

கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு தகட்டூரில் திமுக கொடியேற்று விழா

வேதாரண்யம்,ஜூன் 2: வேதாரண்யம் தாலுகா தகட்டூர் ராமகோவிந்தன்காட்டில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி கொடியேற்று விழா நடைபெற்றது. விழாவிற்கு வேதாரண்யம் மேற்கு திமுக ஒன்றிய செயலாளர் உதயம் முருகையன் தலைமை வகித்தார். மாநில விவசாய அணி துணை தலைவர் வேதரத்தினம், வேதாரண்யம் நகர மன்ற தலைவர் புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட திமுக விவசாய தொழிலாளர் அணி கோவிந்தசாமி வரவேற்றார். நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் மாவட்ட திமுக செயலாளரும் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவருமான கவுதமன் நலத்திட்ட உதவிகளை வழங்கி, திமுக கிளை செயலாளர் ராஜதுரை நினைவு கொடிகம்பத்தில் திமுக கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் அவைத்தலைவர் சீனிவாசன், மாவட்ட துணை செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பாரிபாலன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் துரைராசு உள்ளிட்ட ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் கவுதமன் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளும், சேலை வேட்டி வழங்கி கோயில் வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார்.

The post கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு தகட்டூரில் திமுக கொடியேற்று விழா appeared first on Dinakaran.

Tags : DMK flag ,Thaktoor ,Vedaranyam ,Thakattur Ramagovindangam ,taluk ,Vedaranyam West ,DMK ,Taktoor ,
× RELATED நாகை அருகே தண்டவாளத்தில் படுத்து...