×

இளையான்குடி அருகே சாலைக்கிராமத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்

இளையான்குடி, ஜூலை 1: இளையான்குடி தெற்கு ஒன்றியம் சாலைக்கிராமத்தில் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது .கூட்டத்திற்கு இளையான்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வராசன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன், வடக்கு ஒன்றிய செயலாளர் சுப.மதியரசன், கிழக்கு ஒன்றியச் செயலாளர் தமிழ்மாறன், மேற்கு ஒன்றியச் செயலாளர் வெங்கட்ராமன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் சிறப்புரையாற்றினார். தலைமை கழகப் பேச்சாளர் தக்கோலம் தேவபாலன் கலந்து கொண்டு கலைஞரின் நூற்றாண்டு கால சாதனைகள் குறித்து பேசினார்.

கூட்டத்தில் கவுன்சிலர் செல்வி சாத்தையா, மலையரசி ரவிச்சந்திரன், நகரச் செயலாளர் நைனா முகம்மது, தலைமை கழகப் பேச்சாளர் அய்யாசாமி, ஒன்றிய துணை செயலாளர் கருணாகரன், மாவட்ட இலக்கிய அணி சிவமுத்துவளவன், மாவட்ட பிரதிநிதி செய்யதுகான், ஒன்றிய இலக்கிய அணி ராஜ்குரு, தகவல் தொழில்நுட்ப அணி தமிழ்வாணன், கஸ்பார், சித்திரவேல், தயாளன், கணேசன் ஆகியோர் உட்பட திமுக சார்பு அணி அமைப்பாளர்கள் மற்றும் கிளை கழக நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

The post இளையான்குடி அருகே சாலைக்கிராமத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Artist Centenary Celebration Public Meeting ,Saaligram ,Ilayayankudi ,Dr. ,Kalayankudi ,Ilayayankudi South Union ,Dinakaran ,
× RELATED சேதமான சாலையை சீரமைக்க வேண்டும்