×

ராகுல் குறித்து சர்ச்சை வீடியோ பாஜ ஐடி பிரிவு தலைவர் மீது வழக்கு

பெங்களூரு: ராகுல்காந்தி குறித்து சர்ச்சைக்குரிய வீடியோ வெளியிட்ட புகாரின் அடிப்படையில் பாஜ ஐடி விங் தலைவர் மீது பெங்களூரு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவரான அமித் மாளவியா, கடந்த சில தினங்களுக்கு முன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக, சர்ச்சைக்குரிய அனிமேஷன் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், ‘ராகுல் காந்தி ஆபத்தான மனிதர்’ என்ற அர்த்தத்தில் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக கர்நாடக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் பிரியங்க் கார்கே மற்றும் கர்நாடகா காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரமேஷ் பாபு ஆகியோர் போலீசில் புகார் அளித்தனர். அதையடுத்து பெங்களூரு சைபர் கிரைம் போலீசார், அமித் மாளவியாவுக்கு எதிராக ஐபிசியின் 153ஏ, 120பி, 505(2), 34 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post ராகுல் குறித்து சர்ச்சை வீடியோ பாஜ ஐடி பிரிவு தலைவர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Baja ,Raqul ,Bengaluru ,Rakulkandi ,Rakul ,Baja ID ,Dinakaran ,
× RELATED பாஜ பிரமுகரின் கணவரை வெட்டிய வழக்கு; மேலும் 2 பேர் சரணடைந்தனர்