×

பொது சிவில் சட்டம் அவசியம் என்று பிரதமர் மோடி கூறிய கருத்துக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம்..!!

டெல்லி: பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது அவசியம் என்று பிரதமர் மோடி கூறியிருப்பதற்கு காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கின்றன.

காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், ஆதிர் ரஞ்சின் சவுத்ரி:
பொது சிவில் சட்டத்தை மக்களின் விருப்பத்தின் அடிப்படையிலையே ஒற்றை சட்டமாக மாற்ற முடியும் என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கூறியுள்ளார். பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவது தொடர்பாக எதிர்க்கட்சிகள் மீது எதற்காக மோடி குற்றம் சாட்டுகிறார் என்று காங்கிரஸ் கட்சியின் மக்களைவை உறுப்பினரான ஆதிர் ரஞ்சின் சவுத்ரி கேள்வி எழுப்பியுள்ளார். இது பாஜக அரசு அவர்கள் விரும்பினால் பொது சிவில் சட்டத்தை இயற்றுவார்கள் யார் அவர்களை கேள்வி கேட்க முடியும் என்று சவுத்ரி கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கேரளா மாநில மூத்த தலைவர்:
பொது சிவில் சட்டம் விருப்பப்படும் ஒன்றோ அல்லது தேவையான ஒன்றோ அல்ல என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கேரளா மாநில மூத்த தலைவர் கூறியுள்ளார். இந்த சட்டம் இந்தியாவை ஒரே கலாச்சாரம் கொண்ட நாடக மாற்றுவதற்கான ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் திட்டம் என்றும் தெரிவித்துள்ளார். அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததாலேயே பொது சிவில் சட்டத்தை மோடி கொண்டு வர முயற்சிக்கிறார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் சக்தி சிங் யாதவ்:
பொது சிவில் சட்டம் தொடர்பாக பாஜக-வை தாங்கள் ஆதரிக்க மாட்டோம் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூறியுள்ளது. இது சரியான சட்டமல்ல என்பதால் இதை ஆதரிக்க முடியாது என்று ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் சக்தி சிங் யாதவ் தெரிவித்துள்ளார். முத்தலாக் முறையை ஒழித்தால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் கேரளா முன்னாள் தலைவர் ரமேஷ் சென்னிதாலா:
பொது சிவில் சட்டத்தின் மூலமாக மத ரீதியாக இந்த சமூகத்தை பிளவுப்படுத்த முயற்சி நடப்பதாக காங்கிரஸ் கட்சியின் கேரளா முன்னாள் தலைவர் ரமேஷ் சென்னிதாலா கூறியுள்ளார். 9 ஆண்டுகளில் செய்த சாதனைகளை கூற முடியமால் மத மற்றும் சாதி விஷயங்களை மோடி அரசு கையில் எடுத்து இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இதனிடையே பொது சிவில் சட்டம் அமலாக்கம் தொடர்பாக பிரதமர் மோடி பேசிய நிலையில் நேற்று உத்திர பிரதேசத்தில் முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியத்தின் அவசர ஆலோசனை மேற்கொண்டனர். சுமார் 3 மணி நேரம் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பொது சிவில் சட்ட அமலாக்கத்தை சட்ட ரீதியாக தடுப்பதற்கு வழி முறைகளை அவர்கள் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

The post பொது சிவில் சட்டம் அவசியம் என்று பிரதமர் மோடி கூறிய கருத்துக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம்..!! appeared first on Dinakaran.

Tags : Modi ,Delhi ,Congress ,Left Wings ,PM ,
× RELATED 1982ல் காந்தி திரைப்படம் எடுக்கும் வரை...