×

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்

கீழ்வேளூர்: நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் வெங்கினடங்காலில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமை தாங்கினார். கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, மாவட்ட ஊராட்சி தலைவர் உமாமகேஷ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார ஆத்மா குழு தலைவர் கோவிந்தராசன் வரவேற்றார். மருத்துவ முகாமில் நாகை மாவட்ட திமுக செயலாளரும், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் கவுதமன் தொடங்கி வைத்தார். முகாமில் மாடுகளுக்கு சினை பரிசோதனை, ஆடு, மாடுகளுக்கு நோய் தடுப்பூசிகள், மாடுகளுக்கு செயற்கை கருவூட்டல் மற்றும் பல்வேறு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து சிறந்த முறையில் கால்நடை பராமரிப்பு செய்த விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் கால்நடைகளுக்கான தாது உப்பு, திவன புல் வளர்ப்பதற்கான விதைகள் வழங்கப்பட்டது. முகாமில் வட்டார ஆத்மா குழு உறுப்பினர் பழனியப்பன், ஊராட்சி மன்ற தலைவர் பசுமதி ரமேஷ்குமார் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ் பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 100 சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெறுவதை தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இம் மருத்துவ முகாம் சிறப்பாக தொடங்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் முதற்கட்டமாக வெங்கிடங்கால் ஊராட்சியில் தற்போது துவங்கி வைக்கப்பட்டுள்ளது. தேசிய கால்நடை காப்பீடு திட்டத்தில் கடந்த ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டத்தில் 960 கறவைப்பசுகளுக்கு வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு 50 சதவீதம் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 70 சதவிதம் மானியத்தில் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. கால்நடை மருத்தவர் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க இந்த செயலி மூலம் கால்நடை முருத்துவரை தொடர்பு கொண்டு கால்நடை வளர்ப்போர் பயனடையலாம். இவ்வாறு அவர் கூறினார்.

The post கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Artist Centenary ,Kilyvellur ,Nagapattinam District ,Kililvelur Union Venkinatangal ,Dinakaran ,
× RELATED சென்னையில் உலக தரம் வாய்ந்த கலைஞர்...