×

ஜம்பையில் மேய்ந்து கொண்டிருந்த ஆடு திருடிய 2 வாலிபர்கள் போலீசில் ஒப்படைப்பு

 

பவானி, ஜூன் 26: பவானி அருகே உள்ள ஜம்பை, நத்தக்காடு, கருப்பசாமி கோயில் தோட்டத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (65). விவசாயியான இவர் தான் வளர்த்து வரும் வெள்ளாட்டை விவசாயத் தோட்டத்தில் மேய்ச்சலுக்கு கட்டி இருந்தார். அப்போது, அங்கு பைக்கில் வந்த இருவர், ஆட்டை அவிழ்த்துக் கொண்டு பைக்கில் தப்ப முயன்றனர். இதைக் கண்ட அப்பகுதியினர் ஆட்டுடன் இரு வாலிபர்களையும் மடக்கிப் பிடித்தனர். விசாரணையில், அவர்கள் பவானி செங்காடு, கோட்டை விநாயகர் கோயில் வீதியைச் சேர்ந்த விஜயகுமார் (22), பவானி, சொக்காரம்மன் நகரைச் சேர்ந்த குமார் (25) என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, இருவரையும் பவானி போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

The post ஜம்பையில் மேய்ந்து கொண்டிருந்த ஆடு திருடிய 2 வாலிபர்கள் போலீசில் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Tags : Jamba ,Bhavani ,Subramani ,Karuppasamy ,Jambai, Nattakkadu ,Bhavani.… ,Jambai ,Dinakaran ,
× RELATED போதை மாத்திரை விற்ற 3 வாலிபர்கள் கைது