×

282 காவல் நிலைய பகுதிகளில் 100% போதை பொருள் இல்லை: டி.ஜி.பி தகவல்

நாகர்கோவில்: தமிழ்நாட்டில் 282 காவல் நிலைய பகுதிகளில் 100 சதவீதம் போதை பொருட்கள் விற்பனை இல்லை என்ற நிலை வந்துள்ளது என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறி உள்ளார். தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு நேற்று நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார். இதில் போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கும் வகையில் தோல் பாவை கூத்து நிகழ்ச்சி, மாணவ, மாணவிகளின் ஜிம்னாஸ்டிக் நிகழ்ச்சிகள் நடந்தன. இதை டிஜிபி சைலேந்திரபாபு பார்வையிட்டார். போதை பொருள் விற்பனை குறித்து தகவல் தெரிவிக்க காவல்துறை சார்பில் 7010363173 என்ற செல்போன் எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பின்னர் அவர் அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் போதை பொருட்கள் விற்பனை தடுக்கப்பட்டுள்ளது. போதை பொருட்கள் கடத்த பயன்படுத்தப்பட்ட 2,761 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போதை பொருட்கள் விற்பனை 100% இல்லை என்ற நிலைமை 282 காவல் நிலைய எல்லையில் ஏற்பட்டுள்ளது. 282 காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள், தங்கள் காவல் நிலைய எல்லையில் போதை பொருட்கள் விற்பனை இல்லை என அறிவித்துள்ளனர். போதை பொருட்கள் விற்பனை கும்பலுடன் தொடர்பில் இருந்த 18 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 10 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். போதை பொருட்கள் பிற மாநிலங்களில் இருந்து வருவது பெருமளவு குறைந்துள்ளது. தமிழ்நாடு காவல் துறையில் பணி இடங்கள் காலி இல்லை என்ற நல்ல நிலைமை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 

The post 282 காவல் நிலைய பகுதிகளில் 100% போதை பொருள் இல்லை: டி.ஜி.பி தகவல் appeared first on Dinakaran.

Tags : DGP ,Nagercoil ,Tamilnadu ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...