×

மேற்குவங்கத்தில் பயங்கரம் 2 சரக்கு ரயில்கள் மோதி விபத்து:20 ரயில் சேவைகள் ரத்து

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் நேற்று 2 சரக்கு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. இதில், 12 பெட்டிகள் தடம் புரண்டன. இதனால் 20 ரயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.மேற்குவங்க மாநிலம் பாங்க்குரா மாவட்டத்தில் ஓண்டா ரயில் நிலையம் அருகே காரக்பூர் பாங்க்குரா ஆட்ரா வழித்தடங்களில் செல்லும் சரக்கு ரயில் ஒன்று பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது பின்னால் வந்த மற்றொரு சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 12 சரக்கு பெட்டிகள் தரம் புரண்டன. இந்த விபத்தில் சரக்கு ரயில் இன்ஜின் டிரைவர் காயமடைந்தார். இந்த விபத்து காரணமாக 20 விரைவு மற்றும் பயணிகள் ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சில ரயில்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. சிவப்பு சிக்னலில் ரயில் நிற்காமல் சென்ற ரயில் மெயின் லைனில் செல்லாமல் லூப் லைனில் சென்றதே விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. விபத்து குறித்து விசாரணை நடத்தப்படும் என தென்கிழக்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கிடையே தடம் புரண்ட பெட்டிகள் அகற்றப்பட்டு ரயில் பாதை சீரமைக்கப்பட்டது.

The post மேற்குவங்கத்தில் பயங்கரம் 2 சரக்கு ரயில்கள் மோதி விபத்து:20 ரயில் சேவைகள் ரத்து appeared first on Dinakaran.

Tags : West Bengal ,Kolkata ,Dinakaran ,
× RELATED மேற்குவங்க ஆளுநர் மீதான பாலியல் புகார்: ராஜ்பவனுக்குள் போலீஸ் வர தடை