×

பாலக்காட்டில் ரயில் தண்டவாளங்களை கம்பீரமாக கடந்த சுருளி கொம்பன் யானை : பொதுமக்கள் அச்சம்

பாலக்காடு: மலம்புழா – கஞ்சிக்கோடு சாலையில் அமைந்துள்ள ரயில் தண்டவாளங்களை கம்பீரமாக கடந்து சென்ற சுருளிகொம்பன் என்ற காட்டு யானையால் அப்பகுதி மக்கள் கடும் அச்சமடைந்தனர். பாலக்காடு மாவட்டம், மலம்புழா – கஞ்சிக்கோடு – மலம்புழா சாலையில் ஐஐடி அருகே ரயில்வே தண்டவாளங்கள் உள்ளன. மலம்புழா, கஞ்சிக்கோடு காட்டுப்பகுதியில் இருந்து உணவு, தண்ணீர் தேடி காட்டைவிட்டு வெளியேறிய சுருளி கொம்பன் என்கிற காட்டு யானை ஜாலியாக தண்டவாளத்தை கடந்து சென்றது. இந்த யானை, சில நேரங்களில் தனியாகவும், குட்டி யானைகளுடன் கூட்டமாகவும் உணவு தேடி கஞ்சிக்கோடு அருகே மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளது.

இந்த யானை கூட்டத்தால் உயிர் சேதம் ஒன்றும் இதுவரை ஏற்படவில்லை. அடிக்கடி ரயில்கள் வரும் தண்டவாளங்களை கடப்பதும், மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் யானை உலா வருவதாலும் அப்பகுதி மக்கள் கடும் பீதியில் தவித்து வருகின்றனர். மலம்புழா – கஞ்சிக்கோடு சாலையில் உலா வரும் சுருளி கொம்பனை வனத்துறையினர் மீண்டும் காட்டுக்குள் விரட்டி வருகின்றனர். இருப்பினும், இவை கூட்டமாக உணவு மற்றும் குடிநீர் தேடி மலம்புழா அணை, மற்றும் கஞ்சிக்கோடு அருகே அமைந்துள்ள நீரோடைகளுக்கு வந்து விடுகின்றன. இந்நிலையில், மலம்புழா -கஞ்சிக்கோடு-மலம்புழா சாலைகளில் பயணிப்போரிடம் வனத்துறை சோதனைச்சாவடி அதிகாரிகள், வனவிலங்குகளை பார்த்தால் அவைகளுக்கு தொந்தரவு தராமல் செல்லுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர். யானை கூட்டம், சாலைகளை கடந்த காட்டுக்குள் நுழைந்த பின்னர் செல்லுமாறும் வலியுறுத்தி வருகின்றனர்.

The post பாலக்காட்டில் ரயில் தண்டவாளங்களை கம்பீரமாக கடந்த சுருளி கொம்பன் யானை : பொதுமக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Suruli Kompan ,Palakkad ,Surulikomban ,Malampuzha-Kanjikodu road ,Dinakaran ,
× RELATED பாலக்காடு மாவட்டத்தில் பள்ளிகள் ஜூன் 3ம் தேதி திறக்கின்றன