×

செல்போனில் கேம் விளையாடியதை கண்டித்ததால் 11ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

சென்னை: சென்னை வடபழனி பக்தவசலம் 1வது தெருவை சேர்ந்தவர் சிவா. கார் டிரைவான இவருக்கு மதுமிதா (16) என்ற மகள் உள்ளார். இவர் 10ம் வகுப்பு முடித்துவிட்டு 11ம் வகுப்பு சென்றுள்ளார். வழக்கம் போல் நேற்று மதுமிதா செல்போனில் அதிக நேரம் கேம் விளையாடியதாக கூறப்படுகிறது. இதனால் அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். உடனே மதுமிதா பெற்றோரிடம் பேசாமல், தனது அறைக்கு சென்று உள் பக்கமாக கதவை பூட்டிக்கொண்டார்.

இரவு உணவு சாப்பிட மகள் மதுமிதாவை அவரது பெற்றோர் பலமுறை கதவை தட்டியும் அவர் திறக்காததால், சந்தேகமடைந்து கதவை உடைத்து பார்த்த போது, மதுமிதா மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனே சம்பவம் குறித்து வடபழனி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மதுமிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தற்கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மதுமிதா பயன்படுத்திய செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post செல்போனில் கேம் விளையாடியதை கண்டித்ததால் 11ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Shiva ,1st Street ,Vadpalani Bakhtawasalam, Chennai ,Madhumita ,
× RELATED சிவ வடிவங்களில் மான்