×

இதுவரை இல்லாத அளவிற்கு பொது மாறுதல் கலந்தாய்வுக்கு 82,477 ஆசிரியர்கள் விண்ணப்பம்: கல்வித்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்களும், பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் என கல்வித் துறை அறிவித்திருந்தது. அதன்படி, பள்ளிக்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கல்வி மேலாண்மை தகவல் முகமை (எமிஸ்) என்ற இணையதளத்தில் கடந்த 13ம் தேதியில் இருந்து ஆசிரியர்கள் போட்டிப் போட்டு விண்ணப்பித்து வருகின்றனர். விண்ணப்பப் பதிவு மேற்கொள்ள ஏற்கனவே அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில், அது நேற்றுடன் நிறைவு பெற்றது.

அந்த வகையில் தொடக்கக் கல்வித் துறை இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதலுக்கு என 35 ஆயிரத்து 667 ஆசிரியர்களும், பள்ளிக்கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், முதுநிலை ஆசிரியர்கள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதலுக்கு என 46 ஆயிரத்து 810 ஆசிரியர்களும் என மொத்தம் 82 ஆயிரத்து 477 ஆசிரியர்கள் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனர்.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பொது மாறுதல் கலந்தாய்வுக்கு அதிகளவில் ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.

The post இதுவரை இல்லாத அளவிற்கு பொது மாறுதல் கலந்தாய்வுக்கு 82,477 ஆசிரியர்கள் விண்ணப்பம்: கல்வித்துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Education Department ,Chennai ,Tamil Nadu ,Educational Management Information Agency ,EMIS ,Department of School Education ,
× RELATED 43 நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்...