×

சாரல் மழையால் பசுந்தேயிலை மகசூல் அதிகரிப்பு

 

வால்பாறை, ஜூன் 24: வால்பாறை பகுதியில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் தேயிலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை முதல் வாரத்தில் அதிக அளவில் பெய்தது. இந்நிலையில் கடந்த 5 நாட்களாக மழையுடன் சேர்ந்த இளம் வெயில் நிலவுகிறது. இதனால் பசுந்தேயிலை மகசூல் அதிகரித்துள்ளது. இளம் தேயிலை அரும்புகள் செடிகளில் முளைத்திருப்பது காண்பதற்கும் அழகாக காட்சியளிக்கிறது. மேலும் தற்காலிக பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரித்து கொடுத்துள்ளது. எனவே எஸ்டேட் பகுதியில் இருந்து வால்பாறைக்கு இதர வேலைக்கு வருவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்து உள்ளது.

The post சாரல் மழையால் பசுந்தேயிலை மகசூல் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Valparai ,Dinakaran ,
× RELATED கஞ்சா விற்ற வாலிபர் கைது