×

சீர்காழி, தரங்கம்பாடியை பேரிடர் பாதித்த தாலுகாவாக அறிவிக்க கோரி ஆர்ப்பாட்டம்

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே 2022ம் ஆண்டு பெருமழையால் பேரழிவை சந்தித்த சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய தாலுகாவை பேரிடர் பாதித்த தாலுகாவாக அறிவிக்க வேண்டும். கூட்டுறவு வங்கி மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற வேளாண் கடன்களை தள்ளுபடி செய்ய கோரி தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன் தலைமை வகித்தார். விவசாய சங்க மாவட்ட தலைவர் வைத்தியநாதன், மாவட்ட செயலாளர் விஸ்வநாதன், மாவட்ட துணைத் தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் வேட்டங்குடி சீனிவாசன் வரவேற்று பேசினார். தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு பொதுச்செயலாளர் பி.ஆர் பாண்டியன் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் பாரதிய கிசான் சங்க மாவட்ட செயலாளர் லிங்கேஸ்வரன், விவசாய சங்க தலைவர்கள் ரகு, ரவிச்சந்திரன், அசோகன், ராஜேந்திரன், வரதராஜன் கலந்து கொண்டனர். தொடர்ந்து சீர்காழி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை அடங்கிய மனுவை அளித்தனர்.

The post சீர்காழி, தரங்கம்பாடியை பேரிடர் பாதித்த தாலுகாவாக அறிவிக்க கோரி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Sirkazhi ,Tarangambadi ,Mayiladuthurai District ,Tharangambadi ,Dinakaran ,
× RELATED சீர்காழி அருகே சட்டநாதபுரத்தில்...