×

தொண்டி அருகே நம்புதாளையில் குழந்தைகள் பாதுகாப்பு கூட்டம்

 

தொண்டி, ஜூன் 24: தொண்டி அருகே உள்ள நம்புதாளையில் சமூக பாதுகாப்பு துறை சார்பில் குழந்தை திருமணம் தடுப்பு, குழந்தைகள் பாதுகாப்பு குறித்து கூட்டம் நடைபெற்றது. சமூக பாதுகாப்பு துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு ராமநாதபுரம் சார்பில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நம்புதாளையில் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டிச் செல்வி ஆறுமுகம் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

குழந்தை திருமணம் தடுத்தல் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பேசினர். மேலும் இது குறித்து பொது மக்களிடம் விழுப்புணர்வை ஏற்படுத்த ஏரியா வாரியாக கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. வேல்டு விஷன் இந்தியா ஒருங்கினைப்பாளர் தமிழரசன் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பேசினார். தொண்டி மற்றும் திருவாடானை மகளீர் காவல் நிலைய போலிசார், வார்டு உறுப்பினர் பாண்டியராஜ், அரசு துவக்கப்பள்ளி ஆசிரியர் ராமநாதன், மாணவிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post தொண்டி அருகே நம்புதாளையில் குழந்தைகள் பாதுகாப்பு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Children's safety ,Tondi ,Department of Social Security ,Thondi ,Children's Protection Meeting ,Dinakaran ,
× RELATED விழிப்புணர்வு கூட்டம்