×

பொதுமக்கள் அச்சம் கரூர் கரூர் மாவட்டத்தில் 21 ரேஷன் கடையில் நாப்கின் விற்பனை துவக்கிவைப்பு மகளிர் குழு வாழ்வாதாரம் உயரும்: கலெக்டர் பெருமிதம்

கிருஷ்ணராயபுரம்: கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே மேட்டுமகாதானபுரம் ரேஷன் கடையில் மகளிர் திட்டம் சார்பில் தயாரிக்கப்பட்ட சுகாதார நாப்கின் விற்பனையை கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கலெக்டர் பிரபுசங்கர் சுகாதார நாப்கின் விற்பனையை தொடங்கி வைத்து பேசியதாவது: தமிழக முதல்வர் மகளிர் சார்ந்த திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருவதுடன், கவனம் செலுத்துமாறு அனைத்து மாவட்ட நிர்வாகத்திற்கும் அறிவுறுத்தியுள்ளார். அதில் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தி்ன் மூலம் இயங்கும் ரேஷன் கடைகளில் பெண்களுக்கு சுகாதாரமான சானிட்டரி நாப்கின் மகளிர் குழுக்கள் மூலமாக தயாரிக்கப்பட்டு ‘‘தோழி’’ என்ற பெயரில் உரிய நேரத்தில் உடன் இருப்பவள் என்ற அடைமொழியுடன், 6 நாப்கின் கொண்ட ஒரு பாக்கெட் ரூ.30க்கு, வெளிச்சந்தை விலையை விட குறைவாக கிடைக்கின்ற வகையில் வெள்ளோட்டமாக, கரூர் மாவட்டத்தில் 21 பொதுவினியோக கடைகளில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த முன்னோடி திட்டம் மூலம் அனைத்து பெண்களுக்கும் மாதாவிடாய் காலத்தில் சுகாதாரம் பேணி காக்க முக்கியமாக தேவைப்படும் நாப்கின், எளிமையாகவும், மானிய விலையில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னோடி திட்டமாக தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த திட்டம் நாம் வழங்கக்கூடிய 21 ரேஷன் கடைகளில் பயன்படுத்தும் பெண்களின் கருத்துகள் கேட்கப்பட்ட பின்னர், இந்த பொருளின் தரம் உயர்த்தப்படும், இன்னும் முடிந்தவரையில் எந்த அளவு பெண்களுக்கு குறைந்த விலையில் கொடுக்கவும், மேலும் மானிய விலையில் கிடைக்க திட்டம் விரிப்படுத்தப்படும். பொதுவினியோக கடையில் நாப்கின் கிடைப்பதின் மூலம் பெரிய புரட்சியாக இருக்கும். இது ஒரு அத்தியாவாசிய பொருள் என்ற ஒரு கருத்தை வலியுறுத்தும். இதை மறைத்து வாங்குவதற்கும், ரகசியம் ஏதுமில்லை. இயற்கையாக நடக்கும் விஷயத்திற்கு இது ஒரு முக்கியமான அத்தியாவசிய பொருள். தொடர்ந்து இந்த திட்டம் விரிப்படுத்த மாவட்ட நிர்வாகம் அனைத்து நடவடிக்கை எடுக்கும். இது மகளிர் குழு தயாரிப்பு என்பது குறிப்பிடதக்கது.

மகளிர் சுகாதாரம் மேம்படும், மகளிர் குழுக்களின் வாழ்வாதாரம் உயரும். அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும். யார் வேண்டுமானாலும் வாங்கலாம். ரேஷன் கடைகள் அனைத்து பகுதியிலுள் இருக்கும் என்பதால் இதை தேர்வு செய்துள்ளோம். தற்போது 14 ஊரக பகுதி கடை, 4 நகர்ப்புற பகுதி, அதே போல நகர் சார்ந்த பகுதி கடை என மொத்தம் 21 கடைகளில் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளோம். பெண்களின் கருத்து கேட்கப்பட்டு வெளிச்சந்தையில் கிடைக்கும். பொருளைவிட தரமாக கிடைக்க வழிவகை செய்யப்படும். தற்போது மாநிலம் முழுவதும் 51 குழுக்கள் இந்த பொருளை தயாரிக்கின்றனர். நமது மாவட்டத்தை சேர்ந்த குழு தமிழகத்தில் இது போன்ற பொருட்களை தயாரிக்கின்றனர். இவ்வாறு கலெக்டர் பேசினார். இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குனர் சீனிவாசன், கூட்டுறவு துறை இணை பதிவாளர் கந்தராஜன், துணை பதிவாளர் ஆறுமுகம், கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மோகன்ராஜ், பி.டி.ஓ., சரவணன், வட்ட வழங்கல் அலுவலர் மணிவண்ணன் உட்பட அரசுதுறை அதிகாரிகள், மகளிர் குழுக்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post பொதுமக்கள் அச்சம் கரூர் கரூர் மாவட்டத்தில் 21 ரேஷன் கடையில் நாப்கின் விற்பனை துவக்கிவைப்பு மகளிர் குழு வாழ்வாதாரம் உயரும்: கலெக்டர் பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Karur Karur District ,21 ,Napkin ,Collector ,Perumitham ,Krishnarayapuram ,Mettumagadhanapuram ,Krishnarayapuram, Karur district ,
× RELATED கடலூரில் வீட்டின் கதவை உடைத்து 21 சவரன் நகை, பணம் திருட்டு..