×

வேங்கை மண்டலம் ஊராட்சியில் 100 நாள் வேலைதிட்ட பணியாளர்கள் தூய்மைகாவலர்களுக்கு யோகா பயிற்சி

 

முசிறி, ஜூன் 22: முசிறி வேங்கை மண்டலம் அம்ரித் சரோவர் குளத்தில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதில் 100நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டு யோகா பயிற்சி பெற்றனர். திருச்சி மாவட்டம் முசிறி ஊராட்சி ஒன்றியம் வேங்கை மண்டலம் ஊராட்சியில் அம்ரித் சரோவர் திட்டத்தில் அமைக்கப்பட்ட குளத்தில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் ராஜா செல்வம் தலைமை வகித்தார்.

வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோபிநாத் முன்னிலை வகித்தனர்.வட்டார ஒருங்கிணைப்பாளர் நிர்மலா அனைவரையும் வரவேற்றார். யோகா பயிற்சியாளர் யோகநாதன் மற்றும் அந்தமான் ஆங்கில ஆசிரியரும், யோகா பயிற்சியாளருமான பெரியசாமி ஆகியோர் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் ஆகியோருக்கு யோகா பயிற்சி அளித்தனர். நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள், பணித்தள பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு யோகா பயிற்சி பெற்றனர். ஏற்பாடுகளை செய்த ஊராட்சி செயலர் நதியா அனைவருக்கும் நன்றி கூறினார்.

The post வேங்கை மண்டலம் ஊராட்சியில் 100 நாள் வேலைதிட்ட பணியாளர்கள் தூய்மைகாவலர்களுக்கு யோகா பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Venkai Mandal Panchayat ,Musiri ,World Yoga Day ,Musiri Vengai Mandal Amrit Sarovar Pond ,
× RELATED இளங்கலை படிப்பில் சேர முசிறி அரசு கல்லூரியில் சிறப்பு கலந்தாய்வு