அன்னூர்,ஜூன்22: கோவை மாவட்டம் அன்னூர் பேரூராட்சியில் மொத்தமாக 15 வார்டுகள் உள்ளன. அன்னூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அன்னூருக்கு வந்து கொண்டிருக்கும் பவானி கூட்டுக் குடிநீர் சுமை தாங்கி அருகே உள்ள நீரேற்று நிலையத்தின் அருகே உள்ள பிரதான குழாயில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டது.
அதனை சரி செய்யும் பணியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பணியாளர்கள் மற்றும் அன்னூர் பேரூராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அன்னூருக்கு வரும் குடிநீர் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அன்னூர் பேரூராட்சியில் வசிக்கும் மக்களுக்கு ஓரிரு நாட்கள் குடிநீர் வினியோகம் இருக்காது. என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post பிரதான குழாயில் உடைப்பு அன்னூர் பேரூராட்சியில் குடிநீர் விநியோகம் பாதிப்பு appeared first on Dinakaran.
