×

நெல்லை அருங்காட்சியகத்தில் பொருநை பாடல் போட்டி

நெல்ைல, ஜூன் 21: ஆண்டுதோறும் ஜூன் 21ம் தேதி உலக இசை தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சியகம் சார்பில் பொருநை பாடல் போட்டி நடத்தப்பட உள்ளது. 10 வயது முதல் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் தனித்தனி பிரிவில் பங்கேற்கவேண்டும். 10 முதல் 17 வயது பிரிவினர் தேச பக்தி பாடல்களை பாடவேண்டும். 18 முதல் 30 வயது பிரிவினர் சுய முன்னேற்ற பாடல்களை பாடவேண்டும். 30 வயதிற்கு மேல் உள்ளவர்கள் இயற்கையை பெருமைப்படுத்தும் பாடல்களை பாடவேண்டும். போட்டியில் கலந்துகொள்ள பெயர் விவரம் மற்றும் ஒரு நிமிடம் குரல் பதிவை 9092507578 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு நாளை மறுதினம் (23ம் தேதி) மாலை 5 மணிக்குள் அனுப்பிவைக்க வேண்டும். அதில் இருந்து சிறப்பாக பாடல் பாடியவர்கள் தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்கு ஜூன் 25ம் தேதி நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நேரடி போட்டி நடத்தப்படும். அனுபவம்மிக்க நடுவர்களால் தேர்வுசெய்யப்படும் வெற்றியாளர்களுக்கு பரிசுகளும், பங்கேற்பவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்படும். இத்தகவலை நெல்லை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி தெரிவித்துள்ளார்.

The post நெல்லை அருங்காட்சியகத்தில் பொருநை பாடல் போட்டி appeared first on Dinakaran.

Tags : Porunai Song Competition ,Nellai Museum ,Nelayla ,World Music Day ,Nellai Government ,Dinakaran ,
× RELATED கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு...