×

குலசேகரன்பட்டினத்தில் பட்டப்பகலில் பெட்ரோல் பல்க் கேஷியரை தாக்கி பணம் கொள்ளை

உடன்குடி, ஜூன் 21: குலசேகரன்பட்டினத்தில் பட்டப்பகலில் பெட்ரோல் பல்க் கேஷியரை தாக்கி பணத்தை கொள்ளையடித்த வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர். உடன்குடி அருகேயுள்ள குலசேகரன்பட்டினம் தெற்குத்தெருவைச் சேர்ந்தவர் மகாராஜன்(67). இவர், குலசேகரன்பட்டினத்தில் இருந்து திருச்செந்தூர் செல்லும் ரோட்டில் கல்லாமொழி அனல்மின் நிலையம் பகுதியில் பெட்ரோல் பல்கில் கேஷியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம் பைக்கில் வந்த 2 வாலிபர்கள், ₹200க்கு பெட்ரோல் போட வேண்டுமென கூறியுள்ளனர்.

பெட்ரோல் பம்ப் ஆபரேட்டர் குலசேகரன்பட்டினம் முப்பிடாதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த மணி(37) என்பவர் பெட்ரோல் போட முயன்றபோது, அந்த வாலிபர்கள் அருகில் நின்ற கேஷியர் மகாராஜனை தாக்கி அவரிடமிருந்து பணப்பையை பறித்துக் கொண்டு பைக்கில் தப்பினர். பணப்பையில் ₹22,470 இருந்துள்ளது. இதுகுறித்து மகாராஜன் அளித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம், உடன்குடி பகுதிகளில் பைக் திருட்டு, வழிப்பறி கொள்ளைகள் தொடர் கதையாகி வருகின்றன. ஊர் முழுவதும் சிசிடிவி கேமரா அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தாலும் அனைவரின் கண்ணிலும் மண்ணை தூவி கொள்ளையர்கள் கைவரிசையை காட்டி வருகின்றனர். எனவே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுவது, பழைய குற்றவாளிகளை கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளை தீவிரப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post குலசேகரன்பட்டினத்தில் பட்டப்பகலில் பெட்ரோல் பல்க் கேஷியரை தாக்கி பணம் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Kulasekaranpatnam ,Ebengudi ,Kulasekaranpattinam ,Dinakaran ,
× RELATED எரிவாயு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்