×

திருமலையில்ரூ.4.15 கோடியில் கூடுதல் லட்டு கவுன்டர்: அறங்காவலர் குழு தலைவர் தகவல்

திருமலை: திருமலையில்ரூ.4.15 கோடியில் கூடுதல் லட்டு கவுன்டர் கட்டப்படுவதாக அறங்காவலர் குழு தலைவர் சுப்பா தெரிவித்தார். திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் அறங்காவலர் குழு ஆலோசனை கூட்டம் அதன் தலைவர் சுப்பா தலைமையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து அறங்காவலர் குழு தலைவர் சுப்பா நிருபர்களிடம் கூறியதாவது: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் நலனுக்காக, திருமலையில்ரூ.4.15 கோடியில் கூடுதலாக லட்டு கவுன்டர்கள் கட்டப்படுகிறது. இதற்கான ஒப்பந்தத்திற்கு அழைப்பு விடுக்கப்படும். திருமலை எஸ்.வி.சி. பகுதியில் 18 பிளாக்குகளில் 144 அறைகளின் புனரமைப்பு பணிகள்ரூ.2.35 கோடியில் மேற்கொள்ளப்படும். திருப்பதியில் ராமானுஜர் சந்திப்பு முதல் ரேணிகுண்டா வரைரூ.5.61 கோடியில் சாலை அமைக்கப்படும். விரைவில் சத்தீஸ்கரின் தலைநகரான காந்தி நகர், குஜராத் மற்றும் ராய்பூரில் ஏழுமலையான் கோயில்களை கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

* அலிபிரி சோதனைச்சாவடியில் அதிநவீன வாகன ஸ்கேனர்
திருமலைக்கு தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு வருவதை தடுக்க அலிபிரி சோதனைச்சாவடியில் மேலும் சோதனைகள் பலப்படுத்தப்படும். இதற்காக மாநில அரசுடன் கலந்தாலோசித்து தடை செய்யப்பட்ட பொருட்களை கண்டறிய அதிநவீன தொழில்நுட்ப வாகன ஸ்கேனர்களை வாங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அறங்காவலர் குழு தலைவர் சுப்பா தெரிவித்தார்.

The post திருமலையில்ரூ.4.15 கோடியில் கூடுதல் லட்டு கவுன்டர்: அறங்காவலர் குழு தலைவர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tirumala ,Board of Trustees ,Subba ,Annamayya ,Board of Trustees Information ,Dinakaran ,
× RELATED கோவிந்த நாமாவளி 10 லட்சத்து 1,116 முறை...