×

இந்த வாரம் பணம் வரும் நாட்களும் வழிபடும் தேவதைகளும்…

மிதுனம், கன்னி, தனுசு மற்றும் மீனம் ராசிக்காரர்கள்: திங்கட்கிழமை மற்றும் செவ்வாய் கிழமைகளில் பத்மாவதி தாயார் சமேத வெங்கடாசலபதியை பச்சரிசி பொங்கல் நெய்வேத்தியத்துடன் அர்ச்சனை செய்து வழிபட்டால் குபேர அனுக்கிரகம் உண்டாகும். பின் வளர்பிறை ஆதலால் நல்ல வளர்ச்சி உண்டாகும்.

கடகம், துலாம், மகரம் மற்றும் மேஷ ராசிக்காரர்கள்: புதன் மற்றும் வியாழக் கிழமைகளில் கபாலீஸ்வரரையோ, சிவபெருமானையோ சனி ஹோரையில் அபிஷேக அர்ச்சனை செய்து வழிபடுவது துன்பங்கள் குறைந்து வாழ்வில் நல்ல வளர்ச்சிக்கு வித்திடும். தன வரவும் உண்டாகும்.

சிம்மம், விருச்சிகம், கும்பம் மற்றும் ரிஷபம் ராசிக்காரர்கள்: வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை நாட்களில் சத்ய நாராயணனையோ, பெருமாளையோ, மீனாட்சி – சுந்தரேஸ்வரரையோ சூரிய ஹோரையில் வழிபடுதல் நற்பலன்களை உண்டாக்கும்.

The post இந்த வாரம் பணம் வரும் நாட்களும் வழிபடும் தேவதைகளும்… appeared first on Dinakaran.

Tags : Chant Padmavati ,Sametha Venkatachalapati ,
× RELATED வாசிப்பும் வழிபாடுதான்…