×

தென்மேற்கு பருவகாற்று வலுப்பெற்றது நெல்லையில் வெப்ப பதிவு 100 டிகிரிக்கு கீழ் சரிந்தது

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் தென்மேற்கு பருவகாற்று வலுப்பெற்ற நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நேற்று வெப்ப பதிவு 100 டிகிரிக்கு கீழ் சரிந்தது. கடந்த 3 மாதங்களாக தமிழக மக்களை கோடை வெயில் வாட்டி வந்தது. வழக்கமாக மே மாத இறுதியில் அக்னி நட்சத்திரம் முடிவு பெற்றதும் வெயில் தாக்கம் படிப்படியாக குறையும். ஆனால் இந்த ஆண்டு கூடுதலாக 2 வாரங்களுக்கும் மேல் வெயில் தாக்கம் நீடித்தது. நேற்று முன்தினம் வரை கத்தரி வெயில் போன்று வெப்ப பதிவு 100 டிகிரிக்கு குறையாமல் இருந்தது. கடந்த வாரம் முழுவதும் நெல்ைல மாவட்டத்தில் வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் காற்று வீசிய போதும் புழுக்கம் அதிகமாக உணரப்பட்டது. எப்போது வெயில் விடைபெறும் என்று ஏங்கி தவித்த நிலையில் நேற்றையபோது அதற்கு விடைகிடைத்தது. நேற்று நெல்லை மாவட்டம் முழுவதும் வெயில் தாக்கம் குறைந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெப்ப பதிவு 100 டிகிரிக்கு கீழ் சரிந்தது. நெல்லையில் நேற்றைய அதிகபட்ச வெப்ப பதிவு 97.5 டிகிரியாக சரிந்தது. மந்தமான வெயிலுடன் காற்று வீசியதால் மக்கள் நிம்மதியடைந்தனர். தென்மேற்கு பருவக்காற்று வலுப்பெற்றுள்ளதால் தென்மேற்கு பருவமழை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்வதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது.

The post தென்மேற்கு பருவகாற்று வலுப்பெற்றது நெல்லையில் வெப்ப பதிவு 100 டிகிரிக்கு கீழ் சரிந்தது appeared first on Dinakaran.

Tags : Nelly ,Neddy ,Dinakaran ,
× RELATED நெல்லை அம்பாசமுத்திரம் அருகே மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை சிக்கியது