×

பூட்டை உடைத்து தனியார் நிறுவனத்தில் பணம், செல்போன் திருட்டு

திருச்சி மே 26: தனியார் நிறுவன பூட்டை உடைத்து பணம் மற்றும் செல்போனை திருடிச்சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி காந்தி மார்க்கெட் ரோடு மகாலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் (31). இவர் அரியமங்கலம் தெற்கு உக்கடை பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றை கடந்த 8 வருடங்களாக நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் வழக்கம்போல் கடந்த 23ம் தேதி இரவு நிறுவனத்தை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். மறுநாள் காலையில் கம்பெனிக்கு வரும்போது பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோது ₹.29,500 பணம் மற்றும் 5 மொபைல் போன்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஆனந்த் அரியமங்கலம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

The post பூட்டை உடைத்து தனியார் நிறுவனத்தில் பணம், செல்போன் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Trichy ,Anand ,Mahalakshmi Nagar ,Gandhi Market Road ,Ariyamangalam South Ukkadai ,
× RELATED திருச்சி-திண்டுக்கல் சாலையில் போலீஸ் வாகனம்-ஆட்டோ மோதல்