×

குடியாத்தத்தில் முகமூடி அணிந்து பேராசிரியையிடம் செயின் பறித்த 3 வாலிபர்கள் கைது

குடியாத்தம், மே 26: குடியாத்தத்தில் முகமூடி அணிந்து வந்து பேராசிரியையிடம் செயின் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டையை சேர்ந்தவர் சினேகா(27). சென்றாம்பள்ளி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக உள்ளார். இந்நிலையில் சினேகா கடந்த 4 நாட்களுக்கு முன்பு கல்லூரி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது பைக்கில் முகமூடி அணிந்தபடி வந்த மர்ம ஆசாமிகள் சினேகாவின கழுத்தில் இருந்த 2 சவரன் செயினை பறித்துக்கொண்டு தப்பியோடி விட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவந்தனர்.

இந்நிலையில், குடியாத்தம் டவுன் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஓரிடத்தில் சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர்.
அதில், குடியாத்தம் அடுத்த கல்லூரை சேர்ந்த ஹரி(19), இமான்(20), குடியாத்தம் அடுத்த சித்தூர்கேட்டை சேர்ந்த முபாரக்(19) ஆகியோர் என்பதும், இவர்கள் பேராசிரியையிடம் நகை பறித்துச்சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை போலீசார் கைது செய்து செல்போன், பைக், 2 சவரன் செயின் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

 

The post குடியாத்தத்தில் முகமூடி அணிந்து பேராசிரியையிடம் செயின் பறித்த 3 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Kudiatham ,Gudiyattam ,Sneha ,Gudiyattam Nadupettai ,Vellore district ,Ganhampally ,
× RELATED வீட்டில் பதுக்கிய 2,000 கிலோ ரேஷன் அரிசி...