×

வீட்டு வசதி வாரிய குடியிருப்பு கட்டிடத்தின் தரம் அறிய பொது இடங்களில் புகார் பெட்டி: அமைச்சர் முத்துசாமி பேச்சு

சென்னை: தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி, திருவள்ளூர் மாவட்டம், அயப்பாக்கத்தில் தன்னிறைவு வீட்டுமனை திட்டம் பகுதியில் அமைந்துள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில், ரூ.5.28 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் புதுப்பிக்கும் பணிகளை நேரில் பார்வையிட்டார். அப்போது, மழைக்காலம் துவங்குவதற்கு முன்பு அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டுமென, அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசுகையில், ‘‘அயப்பாக்கத்தில் உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் முறையாக செயல்படாமல் உள்ளது. அதனை புனரமைக்கும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

சுமார் 5.28 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது, இந்த பணிகளை ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு கட்டிடங்கள் தரமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. பொது மக்களிடமிருந்து கட்டிடங்களின் நிறை குறைகளை அறிந்து கொள்ளும் வகையில், 16 இடங்களில் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அதில், பெறப்படும் புகார்களை பரிசீலிக்க தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் பொது மக்களுக்கு உரிய தீர்வு கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.’’ என தெரிவித்தார்.

The post வீட்டு வசதி வாரிய குடியிருப்பு கட்டிடத்தின் தரம் அறிய பொது இடங்களில் புகார் பெட்டி: அமைச்சர் முத்துசாமி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Housing Board ,Minister ,Muthuswamy ,Chennai ,Housing ,Development ,S.Muthusamy ,Tamil Nadu Housing Board ,Tiruvallur district ,
× RELATED கோடை விடுமுறையில் பள்ளி...