×

தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

ஈரோடு,ஜூன்18: ஈரோட்டில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். ஈரோடு கோணவாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் பூபதி என்ற பிரபாகரன்(30).இவரது நண்பர் ஈரோடு வீரப்பன் சத்திரம் ஜான்சி நகரை சேர்ந்த அம்பேத்கர் மகன் குட்ட சாக்கு என்ற லோகேஸ்வரன்(23). இவர்கள், இருவர் மீதும் கொலை, கொள்ளை, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 7ம் தேதி ஈரோடு மேட்டூர் சாலையில் செல்போன் கடை நடத்தி வருபவரை தாக்கி, அவர் கழுத்தில் அணிந்திருந்த 6.5 பவுன் நகையை பறித்து சென்றனர். இதையடுத்து, ஈரோடு வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து, பூபதி என்ற பிரபாகரனையும், குட்டசாக்கு என்ற லோகேஸ்வரனையும் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இவர்கள், இருவரும் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க ஈரோடு வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், டிஎஸ்பி ஆறுமுகம் வாயிலாக எஸ்பி ஜவகருக்கு தெரிவித்தனர்.  இதையடுத்து எஸ்பி, ஈரோடு கலெக்டருக்கு பரிந்துரைத்தார். இந்த பரிந்துரையை ஏற்ற கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா நேற்று பிரபாகரனையும், லோகேஸ்வரனையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதன்பேரில், ஏற்கனவே கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரபாகரன், லோகேஸ்வரன் இருவரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை, ஈரோடு வடக்கு போலீசார், கோவை மத்திய சிறைத்துறை அதிகாரிகளிடம் வழங்கினர்.

The post தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது appeared first on Dinakaran.

Tags : Erode ,Konavaikal ,Dinakaran ,
× RELATED கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த...