×

ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி

உளுந்தூர்பேட்டை, ஜூன் 18: உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது மேப்புலியூர் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் ராஜவேல் மகன் வசந்தவேலு (22). இவர் நேற்றுமுன்தினம் இரவு இதே பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் அந்த வழியாக சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் மோதி படுகாயத்துடன் கிடந்துள்ளார். தகவல் அறிந்து சென்ற உறவினர்கள் அவரை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து விருத்தாசலம் ரயில்வே காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி appeared first on Dinakaran.

Tags : Ulundurpet ,Mapuliyoor village ,Rajavel ,Vasanthavelu ,Dinakaran ,
× RELATED மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல்...