×

அதிமுக ஆட்சியில் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் என்ஆர்ஐ கோட்டாவில் மாணவர் சேர்க்கையில் நடந்த முறைகேடு குறித்து அமலாக்கத்துறை வழக்குப்பதிவு

சென்னை: அதிமுக ஆட்சியில் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் என்ஆர்ஐ கோட்டாவில் மாணவர் சேர்க்கையில் நடந்த முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. சென்னையில் உள்ள அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் 2016-2017 ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடந்தது என புகார் செய்யப்பட்டது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய விசாரணையில் என்ஆர்ஐ கோட்டாவில் மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டான என் ஆர் ஐ கோட்டாவில் 93 மாணவர்கள் அந்தாண்டில் சேர்க்கப்பட்டனர். அவர்கள் விண்ணப்பங்களை சரிப்பார்த்தபோது அதில் 18 பேர் மட்டுமே உரிய ஆவணங்களை சமர்பித்திருந்தனர். எஞ்சிய 75 பேர் மோசடி குறித்து யான சான்று மற்றும் ஆவணங்கள் இல்லாதது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய ஆய்வில் தெரியவந்தது.

அவர்களில் சசிகலாவின் உறவினரான விவேக் ஜெயராமனும் ஒருவர் என அப்போதே லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் அறிவிக்கப்பட்டது. என்ஆர்ஐ கோட்டாவில் மாணவர் சேர்க்கையில் உரிய விதிமுறைகளை அப்போதைய துணைவேந்தர் வணங்காமுடி பின்பற்றவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அது தொடர்பாக வழக்குபதிவு செய்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வணங்காமுடி வீட்டில் சோதனையும் மேற்கொண்டனர். மாணவர் சேர்க்கையில் நடந்த முறைகேடு தொடர்பாக பல்கலைக்கழகத்தின் மூத்த அதிகாரிகள் 5 பேரும் குற்றச்சாட்டுக்கு ஆளானர்கள். விஜிலென்ஸ் வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறையினரும் புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர். சட்டவிரோத பணபரிமாற்றம் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த வழக்கில், அமலாக்கத்துறையின் விசாரணை தீவிரமடைந்துள்ளது. அதற்காக குற்றச்சாட்டுக்கு ஆளான முன்னாள் துணைவேந்தர் வணங்காமுடி உள்ளிட்டவர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அதற்காக ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லஞ்ச ஒழிப்பு போலீசார் 2018ம் ஆண்டு முறைகேடு குறித்துவழக்குப்பதிவு செய்தனர். அதை அடிப்படையாக வைத்தே அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்துள்ளனர். முந்தைய அதிமுக ஆட்சியில் அம்பேத்கர் சட்டப்பல்கலைகழகத்தில் என் ஆர் ஐ கோட்டாவில் மாணவர் சேர்க்கையில் அரங்கேறிய விவகாரத்தில் 5 ஆண்டுகளுக்கு பின்பு அமலாக்கத்துறையும் மூக்கு நுழைத்திருப்பதால் அப்போது அத்துறைக்கு பொறுப்பு வகித்த அமைச்சர் முதல் உயரதிகாரி வரை அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.

The post அதிமுக ஆட்சியில் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் என்ஆர்ஐ கோட்டாவில் மாணவர் சேர்க்கையில் நடந்த முறைகேடு குறித்து அமலாக்கத்துறை வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Enforcement Directorate ,NRI ,Ambedkar Law University ,AIADMK ,CHENNAI ,Enforcement Department ,
× RELATED விழுப்புரம் வட்டாச்சியர் சுந்தரராஜன்...