×

இன்றைய மின்தடை

 

தேனி, ஜூன் 17: தேனி அன்னஞ்சி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக, இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தேனி கலெக்டர் அலுவலக வளாகம், மாவட்ட போலீஸ் எஸ்பி அலுவலக வளாகம், மாவட் டவேலைவாய்ப்பு அலுவலகம், புதிய பேருந்து நிலையம், தொழிற்பேட்டை, சிவாஜி நகர், அரப்படித்தேவன்பட்டி, வடபுதுப்பட்டி, தேனி பாரஸ்ட்ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்பட உள்ளது என தேனி மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் பிரகலாதன் தெரிவித்துள்ளார்.

இதேபோல, உத்தமபாளையம் துணை மின்நிலையத்திற்குட்பட்ட உத்தமபாளையம், கோம்பை, அனுமந்தன்பட்டி, பண்ணைப்புரம், ராயப்பன்பட்டி, கோகிலாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது

The post இன்றைய மின்தடை appeared first on Dinakaran.

Tags : Theni ,Theni Annanji ,Dinakaran ,
× RELATED பெரியகுளத்தில் இளம்பெண்ணை கூட்டு...