×

கோவையில் கிராப்ட் பஜார்-2023 கண்காட்சி துவங்கியது

 

கோவை, ஜூன் 17: கோவையில் கிராப்ட் பஜார் 2023 கைவினை பொருட்கள் விற்பனை மற்றும் கண்காட்சி கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா கல்யாண மண்டபத்தில் துவங்கியது. கண்காட்சியை தஸ்கரி ஹாத் சமிதிரூ தில்லி ஹாத் அறக்கட்டளை நிர்வாகி ஜெயா ஜேட்லி துவக்கிவைத்தார். தமிழ்நாடு கிராப்ட் கவுன்சில் நிர்வாகிகள் கூறுகையில், ‘கிராப்ட்ஸ் கவுன்சில் ஆப் தமிழ்நாடு (சிசிடிஎன்) 1988ம் ஆண்டு கோவையில் துவங்கப்பட்டது.

இந்திய கைவினைஞர்கள் மற்றும் நெசவாளர்களை ஊக்குவிப்பதே எங்கள் அமைப்பின் முக்கிய நோக்கம். அவர்களின் சந்தையை நோக்கி நாங்கள் வேலை செய்கிறோம். “கிராப்ட் பஜார்” மூலம் இந்தியா முழுவதிலும் உள்ள கைவினைத் தொழில் செய்பவர்களுக்கு (ஜவுளி மற்றும் கைவினைப் பொருட்கள்) தங்கள் பொருட்களைக் காட்சிப்படுத்தவும் விற்பனை செய்யவும் ஒரு தளத்தை கிராப்ட் பஜார் வழங்குகிறது. கைத்தறி மற்றும் கைவினை கலைஞர்கள் தங்கள் பொருட்களை ஒரு பெரிய வாடிக்கையாளர். நுகர்வோர் தளத்தில் காட்சிப்படுத்த ஒரு தளத்தை நாங்கள் வழங்குகிறோம்.

இந்த ஆண்டு அஸ்ஸாம் முதல் கேரளா வரை 100க்கும் மேற்பட்ட விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக கோவையில் துவங்கப்பட்ட இந்த கிராப்ட் பஜாரில் கலை பொருட்கள் – ஓவியங்கள், குருவாயூர் சுவரோவியங்கள். பித்தளை, கண்ணாடி மற்றும் மரக் கலைப்பொருட்கள் உள்ளிட்ட அனைத்தும் உள்ளன. கண்காட்சி ஜூன் 21ம் தேதி வரை நடைபெறவுள்ள கிராப்ட் பஜாருக்கு பொதுமக்கள் வருகை தந்து, தங்கள் ஆதரவை வழங்க வேண்டும்’ என்றனர்.

The post கோவையில் கிராப்ட் பஜார்-2023 கண்காட்சி துவங்கியது appeared first on Dinakaran.

Tags : Craft Bazaar-2023 ,Coimbatore ,Craft Bazaar 2023 ,Avinasi… ,Dinakaran ,
× RELATED கோவை மருத்துவமனையில் தொழிலாளி...