×

உதய்ப்பூர் ஜகதீஷ் கோயில்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

சிற்பமும் சிறப்பும்

ஆலயம்: ஜகதீஷ் கோயில், உதய்ப்பூர், ராஜஸ்தான்.

காலம்: 1652 இல் மகாராணா ஜகத் சிங் – ஆல் கட்டப்பட்டது.

ராஜஸ்தான் மற்றும் குஜராத்தின் கோயில் கட்டிடக்கலை, பாரதத்தின் மற்ற பகுதிகளில் இருந்து வேறுபட்டு ‘‘மரு குர்ஜரா” (சாளுக்கிய அல்லது சோலங்கி பாணி) கட்டிடக்கலை என்று அழைக்கப்படுகிறது.

அவை பிரம்மாண்டமாகவும், பெரியதாகவும் இல்லாவிட்டாலும், பிரமிக்க வைக்கும் கட்டுமான அழகு, நுணுக்கமான அலங்காரங்கள் நிறைந்து கவனத்தை ஈர்க்கக்கூடியவை.

ராஜஸ்தானின் ஏரி நகரமான உதய்ப்பூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்தக்கோயில், வட இந்தியாவின் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை முக்கியத்துவம் வாய்ந்த கோயில்களுள் ஒன்று.கோயிலின் நுழைவாயிலில் இரண்டு பெரிய பளிங்குக்கல் யானைகள் வரவேற்கின்றன.‘நாகர’ கட்டிடக்கலை வடிவில் முற்றிலும் பளிங்கு கற்கள் கொண்டு மூன்று அடுக்குகளுடன் சிகரம், கர்பக்ரஹம் மற்றும் சபாமண்டபம் ஆகியவற்றுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலயம், செழுமையாக செதுக்கப்பட்ட தூண்கள், நேர்த்தியான சிற்பங்களுடன் காண்போரைக்கவர்ந்திழுக்கிறது.

சுமார் 80 அடி உயர பிரதான விமானத்தின் புறச்சுவர்களில் தெய்வ சிற்பங்கள், யானைகள், குதிரை வீரர்கள் மற்றும் நடன, இசைக்கலைஞர்களின் எண்ணற்ற அழகிய சிற்பங்களைக் கொண்டுள்ளது.லட்சுமி நாராயணர் பிரதான வழிபாட்டுத் தெய்வமாக விளங்கும் இவ்வாலயத்தில், விநாயகர், சூரியக்கடவுள், சக்தி தேவி மற்றும் சிவன் ஆகியோருக்கு சிற்றாலயங்கள் உள்ளன.

‘ஜகதீஷ் மந்திர்’ என்னும் இவ்வழகிய ஆலயம், வரலாற்று முக்கியத்துவம் பெற்ற உதய்ப்பூர் நகரின் பிரம்மாண்ட `சிட்டி பேலஸ்’ அரண்மனைக்கு மிக அருகில் அமைந்துள்ளது.

தொகுப்பு: மது ஜெகதீஷ்

The post உதய்ப்பூர் ஜகதீஷ் கோயில் appeared first on Dinakaran.

Tags : Udaipur ,Jakadeesh Temple ,Kunkumam Spiritual Sculpture and Excellence Temple ,Jakadesh Temple ,Udaipur, Rajasthan ,Jagadesh Temple ,
× RELATED இந்தியாவின் உதய்பூர் நகரில் பழங்கால கார்கள் காட்சிக்கு வைப்பு!!