நிலக்கோட்டை: கொடைரோடு ரயில் நிலையத்தில் சென்னை- குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் நின்று சென்றது. மீண்டும் ரயில் சேவை துவங்கியிருப்பதால் அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் பாரம்பரியமிக்க கொடை ரோடு ரயில் நிலையத்தில் கடந்த கொரோனா தடை காலத்திற்கு முன்பு வரை 10க்கும் மேற்பட்ட ரயில்கள் நின்று சென்றன. கொரோனா தடை காலத்திற்கு பின் அனைத்து ரயில்களும் இயக்கப்பட்டாலும், கொடைரோடு ரயில் நிலையத்தில் எந்த ரயில்களும் நின்று செல்லவில்லை. இதனால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அப்பகுதியினர் கோரிக்கையை ஏற்று திண்டுக்கல் எம்பி வேலுச்சாமி, மதுரை கோட்ட ரயில்வே அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தார். இதன் பலனாக சென்னையில் இருந்து மதுரை வழியாக குருவாயூர் செல்லும் தினசரி எக்ஸ்பிரஸ் மற்றும் மதுரையில் இருந்து தெலங்கானா மாநிலம் கட்சுக்கூடா செல்லும் வாரந்திர எக்ஸ்பிரஸ் ஆகிய 2 ரயல்களை கொடைரோடு ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கொடைரோடு ரயில் நிலையத்தில் நேற்று நடந்த இதற்கான துவக்க நிகழ்ச்சிக்கு மதுரை கோட்ட மேலாளர் ஆனந்த் முன்னிலை வகித்தார். மதுரை கோட்ட வணிக மேலாளர் ரதிப்பிரியா வரவேற்றார். ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், திண்டுக்கல் எம்பி வேலுச்சாமி தலைமை வகித்து கொடைரோடு வந்த சென்னை- குரூவாயூர் ரயில் எக்ஸ்பிரஸ் ரயிலை கொடியசைத்து வரவேற்றனர். இந்நிகழ்ச்சியில் திமுக திண்டுக்கல் மாவட்ட துணை செயலாளர் நாகராஜன், மாவட்ட பொருளாளர் சத்தியமூர்த்தி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கரிகால பாண்டியன், நிலக்கோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், அம்மையநாயக்கனூர் பேரூராட்சி தலைவர் செல்வராஜ், பேரூர் செயலாளர்கள் விஜயகுமார், ஜோசப் கோவில் பிள்ளை, மாநில பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன், பாஜ மாவட்ட தலைவர் தனபால், ஒன்றிய தலைவர் பாஸ்கரன், ஒன்றிய செயலாளர் ராணி கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். இன்று வாரந்திர எக்ஸ்பிரசான மதுரை- கட்சுக்கூடா ரயில் கொடைரோட்டில் நின்று செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. கொடைரோடு ரயில் நிலையத்தில் மீண்டும் ரயில் சேவை துவங்கியிருப்பதால் அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.பழநியில் தரிசனம் இந்நிகழ்ச்சிக்கு பின் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பழநி மலைக்கோயில் சென்று முருகனை தரிசனம் செய்தார்.
* விரைவில் மற்ற 9 ரயில்கள் இயக்கம்
விழாவில் எம்பி வேலுச்சாமி பேசுகையில், ‘பொதுமக்கள், விவசாயிகள் தொடர் கோரிக்கையின் அடிப்படையில் கொடைரோடு ரயில் நிலையத்தில் முதற்கட்டமாக 2 ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக மீதமுள்ள 9 ரயில்களும் நின்று செல்ல உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
The post கொடைரோட்டில் நின்று சென்றது குருவாயூர் எக்ஸ்பிரஸ்: மீண்டும் ரயில் சேவை துவங்கியதால் அனைத்து தரப்பினரும் ‘ஹேப்பி’ appeared first on Dinakaran.
