×

ஆவின் பால் பண்ணையில் அமைச்சர் ஆய்வு

பாடாலூர் ஜூன் 15: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே திருவளக்குறிச்சி கிராமத்தில் ஆவின் நிறுவனத்திற்கு சொந்தமான பால் பண்ணையில் பால்வளத் துறை அமைச்சர் மனோதங்கராஜ் நேற்று காலை ஆய்வு மேற்கொண்டார்.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே திருவளக்குறிச்சி கிராமத்தில் ஆவின் நிறுவனத்திற்கு சொந்தமான பால் பண்ணை செயல்பட்டு வருகிறது. இந்த பால் பண்ணையில் பால்வளத்துறை அமைச்சர் அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று காலை ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பல்வேறு கிராமங்களில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திலிருந்து வரும் பாலை ஆய்வு செய்த அமைச்சர், பால் குளிரூட்டும் பகுதி, குளிரூட்டும் இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து கழிவுநீர் வெளியேற்றப்படும் பகுதியை ஆய்வு மேற்கொண்டு, முறையாக பராமரிக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

பால் பண்ணைக்கு ஒவ்வொரு நாளும் வரும் பாலின் அளவு குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும், பால் பண்ணையில் உள்ள அனைத்து பகுதியையும் மிகவும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்குமாறு அறிவுறுத்தினார். அவருடன் பெரம்பலூர் தொகுதி எம்எல்ஏ பிரபாகரன், ஆலத்தூர் மேற்கு ஒன்றிய மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சோமு. மதியழகன், உதவி பொது மேலாளர் சேகர், மேலாளர் ஜஸ்டின், துணை மேலாளர் அரி கோவிந்தராஜ், தர கட்டுப்பாட்டு அலுவலர் லோக்கியா, ஆவின் பால் பண்ணை பணியாளர்கள் உடனிருந்தனர்.

28ம் தேதி முதல் கூட்டம்
புதிதாக தேர்வுசெய்யப்பட் டுள்ள 8 பேர்களும், பெரம்ப லூர் மாவட்ட ஊராட்சித் தலைவரும், மாவட்ட திட்டக் குழுத் தலைவருமான குன்னம் ராஜேந்திரன் தலை மையில் மாவட்டத்தின் 8 வார்டுகளிலும் செயல்படுத்தப் படும் திட்டப்பணிகள் குறித் து பரிந்துரைகளை, ஆலோ சனைகளை வழங்குவர். மாவட்ட திட்டக்குழு கூட்டம் 3 மாதங்களுக்கு ஒருமுறை மாவட்ட ஊராட்சிக் கூட்ட அ ரங்கில் நடத்தப்படும். முதல் கூட்டம் வருகிற 28ம் தே தி நடத்தப்படும் என தேர்தல் நடத்தும் அலுவலர் லலிதா தெரிவித்துள்ளார்.

The post ஆவின் பால் பண்ணையில் அமைச்சர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Aawin ,Padalur ,Aavin ,Thiruvalakurichchi ,Padalur, Aladhur taluka, Perambalur district ,Dinakaran ,
× RELATED பாடாலூர் அருகே விபத்து பைக் மீது கார் மோதல்: பெண் பலி