×

திருமூர்த்திமலையில் மண் அள்ள அனுமதிக்க விவசாயிகள் கோரிக்கை

 

உடுமலை, ஜூன் 15: உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலையில் தற்போது, நீர்மட்டம் வெகுவாக குறைந்து பெரும்பகுதி மண் மேடாக காட்சி அளிக்கிறது. எனவே, கடந்த காலங்களில் அனுமதித்தது போல், தற்போதும் வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.அதேநேரம், பிஏபி கால்வாய் சீரமைப்பு பணிக்காக அணையில் இருந்து மண் அள்ளப்படுகிறது.உரிய பணம் செலுத்தி மண் அள்ளப்படுவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘கால்வாய் பணிக்காக மண் அள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. ஏராளமான லாரிகளில் மண் அள்ளி கொண்டு செல்லப்படுகிறது. அதிகாரிகள் கண்காணிப்பதில்லை. முறைகேடு நடக்காமல் தடுக்க வேண்டும்.மேலும், விவசாயிகள் கோரிக்கை ஏற்று அணையில் வண்டல் மண் அள்ள மாவட்ட ஆட்சியர் உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும். ஏனெனில் தென்மேற்கு பருவமழை துவங்கிவிட்டால் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும். எனவே, அதற்கு முன்பாக அனுமதி வழங்க வேண்டும்’‘ என்றனர்.

The post திருமூர்த்திமலையில் மண் அள்ள அனுமதிக்க விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tirumurthimalai ,Udumalai ,
× RELATED ஒப்பந்த கூலி வழங்க வலியுறுத்தல்...