×

அனைத்து மோட்டார் வாகன தொழிலாளர் சங்கம் திறப்பு

கும்மிடிப்பூண்டி: தேர்வாய் ஊராட்சியில் அனைத்து மோட்டார் வாகன தொழிலாளர் சங்கம் திறப்பு விழாவில், டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ பங்கேற்றார். கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வாய் ஊராட்சியில் தேர்வாய் வட்டார அனைத்து வாகன மோட்டார் வாகனத் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் திறப்பு விழா, திமுக செயல்திட்ட குழு உறுப்பினர் கும்மிடிப்பூண்டி வேணு தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதில், ஊராட்சி தலைவர் முனிவேல், சங்க தலைவர் சிவகுமார் வரவேற்றனர். நிகழ்வில் கும்மிடிப்பூண்டி தொகுதி பொது தொழிலாளர் முன்னேற்ற சங்க பொது செயலாளர் மணிபாலன், துணை பொது செயலாளர் பாஸ்கரன், துணை செயலாளர் தினகரன், திமுக மாவட்ட துணை செயலாளர் ரவி, மாவட்ட பொருளாளர் ரமேஷ், பொதுக்குழு உறுப்பினர் குணசேகரன், துணை தலைவர் அருள், ஒன்றிய நிர்வாகிகள் பல்லவாடா ஞானம், மாவட்ட பிரதிநிதி பரத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து திமுக கட்சி கொடி மற்றும் சங்க கொடியை ஏற்றி, சங்க பெயர் பலகையை நிகழ்வில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் திறந்து வைத்து, பொதுமக்களுக்கும், சங்கத்தினருக்கும் இனிப்புகளை வழங்கி, பொதுமக்களின் முன்னிலையில் உரையாற்றினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சங்க தலைவர் சிவகுமார், சங்க செயலாளர் சுதாகர், பொருளாளர் ராஜேஷ்குமார், துணை தலைவர் ஜெகதீசன், சங்க ஆலோசகர் சிவஇளங்கோ, புகழேந்தி, சஞ்சய், சதீஷ், லோகன், கோபி, துணை தலைவர்கள் தட்சிணாமூர்த்தி, தென்னரசு, துணை செயலாளர்கள் ஆசையன், பாபு கருணாகரன், முருகன், சரண்ராஜ், நாகராஜ் ஆகியோர் முன்னின்று நடத்தினர்.

The post அனைத்து மோட்டார் வாகன தொழிலாளர் சங்கம் திறப்பு appeared first on Dinakaran.

Tags : All Motor Vehicle Workers Union ,Kummidipoondi ,DJ Govindarajan ,MLA ,All Motor Vehicle Workers' Union ,Teherai Panchayat ,
× RELATED 10 மாவட்டங்களில் 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்