×

வீட்டின் பூட்டை உடைத்து 2 பவுன் நகை, பணம் திருட்டு

வடலூர், ஜூன் 14: குள்ளஞ்சாவடி முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகன் தரணிதரன் (36). இவர் மனைவி, பிள்ளைகளுடன் சென்னையில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 11ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்னைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். நேற்று வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்த நிலையில் இருந்ததை கண்ட தரணிதரன் சித்தப்பா ரமேஷ் திருட்டு சம்பவம் குறித்த தகவலை தரணிதரனுக்கு தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், வீட்டுக்கு வந்து பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த தாலி செயின் உட்பட 2 பவுன் நகை, அரை கிலோ வெள்ளி, பணம் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து குள்ளஞ்சாவடி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார், கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர். மேலும் மோப்ப நாய் மூலம் சோதனை மேற்கொண்டனர்.

The post வீட்டின் பூட்டை உடைத்து 2 பவுன் நகை, பணம் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Ravichandran ,Dharanidharan ,Kullanjavadi Muslim Street ,Chennai ,
× RELATED ஈரோடு அருகே சாணார்பாளையம் பகுதியில் 150 கிலோ கஞ்சா பறிமுதல்..!!