×

கறம்பக்குடி அருகே பைக்கில் இருந்து கீழே விழுந்த வாலிபர் பலி

 

கறம்பக்குடி,ஜூன் 12: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே நரங்கியப்பட்டு யாதவர் தெருவை சேர்ந்தவர் வேலு விவசாயி. இவரது மகன் பாலகிருஷ்ணன் (27). இவர் கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார். 6 மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து வந்த அவர் தற்போது விவசாய செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் பாலகிருஷ்ணன் தனது பைக்கில் கறம்பக்குடி பெரியாற்று பாலம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, ரோட்டின் ஓரத்தில் கிடந்த மண்ணில் சருக்கி, பைக்குடன் பாலத்திற்கு கீழே விழுந்தார்.

இதில் பலத்த காயமடைந்த பாலகிருஷ்ணனை, அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், வாலிபர் பாலகிருஷ்ணன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்த கறம்பக்குடி போலீசார் விரைந்து சென்று பாலகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post கறம்பக்குடி அருகே பைக்கில் இருந்து கீழே விழுந்த வாலிபர் பலி appeared first on Dinakaran.

Tags : Karambakudi ,Velu ,Yadava Street ,Pudukottai district ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வில் சாதனை கறம்பக்குடி அரசு பள்ளி மாணவருக்கு பாராட்டு