×

கோட்சே இந்தியாவின் மதிப்புவாய்ந்த மகன்: ஒன்றிய அமைச்சர் கிரிராஜ்சிங் சர்ச்சை பேச்சு

தண்டேவாடா: பாபர், அவுரங்கசீப் போன்ற முகாலய மன்னர்கள் போல் கோட்சே ஆக்கிரமிப்பாளர் அல்ல. அவர் இந்தியாவின் மதிப்புவாய்ந்த மகன் என்று ஒன்றிய அமைச்சர் கிரிராஜ்சிங் பேசினார். சட்டீஸ்கர் மாநிலம் தண்டேவாடா நகரில் ஒன்றிய அமைச்சர் கிரிராஜ்சிங் நேற்று கூறியதாவது: தங்களை முகாலய மன்னர்கள் பாபர், அவுரங்கசீப் குழந்தைகள் என்று சொல்லிக் கொள்வதில் மகிழ்ச்சி அடைபவர்கள் தாயின் உண்மையான மகன்களாக இருக்க முடியாது. கோட்சே காந்தியைக் கொன்றவர் என்றால், அவரும் (கோட்சே) இந்தியாவின் மதிப்புவாய்ந்த மகன் தான். இவர் இந்தியாவில் பிறந்தவர். அவர் பாபர் மற்றும் அவுரங்கசீப் போன்ற ஆக்கிரமிப்பாளர் அல்ல. இவ்வாறுஅவர் கூறினார்.

The post கோட்சே இந்தியாவின் மதிப்புவாய்ந்த மகன்: ஒன்றிய அமைச்சர் கிரிராஜ்சிங் சர்ச்சை பேச்சு appeared first on Dinakaran.

Tags : Gotze ,India ,Union ,Dhandewada ,Kotze ,Khampala ,Babar ,Aurangseep ,
× RELATED குவைத் சென்றடைந்த மத்திய இணைஅமைச்சர்