×

விஷம் குடித்து கணவர் தற்கொலை

தேனி, ஜூன் 6: தேனி-அல்லிநகரம் அவ்வையார் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ் மகன் கார்த்தி(33). இவர் தேனி மாவட்ட நீதிமன்றத்தில் சுகாதார பணியாளராக பணிபுரிந்து வந்தார். இவர் அடிக்கடி மது அருந்திவிட்டு சம்பளப் பணத்தை கூட வீட்டிற்கு தராமல் இருந்துள்ளார். இதனால் இவருக்கும், இவரது மனைவி அபிராமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் கடந்த ஏப்ரல் மாதம் அபிராமி கணவரிடம் கோபித்துக் கொண்டு மதுரை ஆனையூரில் வசிக்கும் அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மனவேதனையில் இருந்து வந்த கார்த்திகேயன் கடந்த 3ம் தேதி இரவு விஷமருந்தினார். உயிருக்கு ஆபத்தான நிலையில் தேனி அரசினர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கார்த்தியேகன் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அல்லிநகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post விஷம் குடித்து கணவர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Theni ,Nagaraj Makan Karthi ,Avvaiyar Street, Theni-Allinagaram ,
× RELATED பெரியகுளத்தில் இளம்பெண்ணை கூட்டு...