×

தொடரும் பதற்றம்; நேட்டோ கோரிக்கையை ஏற்று கொசோவோ நாட்டிற்கு கமாண்டோக்களை அனுப்பிய துருக்கி..!!

துருக்கி: தனது நாட்டின் வடக்கில் அமைதியை நிலைநாட்ட நேட்டோ கோரிக்கைக்கு ஏற்ப கொசோவோவிற்கு கமாண்டோக்களை அனுப்பியதாக துருக்கி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. சொர்பியாவில் இருந்து கொசோவோ நாட்டை சுதந்திர நாடாக அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் அங்கீகரித்துள்ளன. ஆனால் சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் கொசோவோ நாட்டை அங்கீகரிக்க மறுத்து வருகின்றன. இந்நிலையில் கொசோவோவில் அரசியல் நெருக்கடி வன்முறையாக மாறியுள்ளது. செர்பியர்கள் பெரும்பான்மை பகுதியில் அல்பேனிய இன மேயர்கள் பதவியேற்றதில் இருந்து நெருக்கடி தீவிரம் அடைந்துள்ளது.

பெரும்பான்மை செர்பியர்கள் தேர்தலை புறக்கணித்ததால் அல்பேனியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நேற்று நடந்த வன்முறையில் 30 அமைதி படையினரும், தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்த 52 செர்பியர்களும் காயமடைந்தனர். இந்நிலையில் வன்முறையை கட்டுப்படுத்த கொசோவோவுக்கு கமாண்டோக்களை அனுப்பியதாக துருக்கி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வீடியோவையும் துருக்கி வெளியிட்டுள்ளது.

The post தொடரும் பதற்றம்; நேட்டோ கோரிக்கையை ஏற்று கொசோவோ நாட்டிற்கு கமாண்டோக்களை அனுப்பிய துருக்கி..!! appeared first on Dinakaran.

Tags : Turkey ,Kosovo ,NATO ,Turkish Ministry of Defense ,Dinakaran ,
× RELATED இத்தாலி கடலில் மேலும் 14 சடலங்கள் மீட்பு